Translate

Friday 28 December 2012

பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளன: வசந்த பண்டார



நாட்டில் இன்று வேலுப்பிள்ளை பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கி வருகின்றன.
எனவே, இவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.

ஹலால் சான்றிதழுக்காக அறவிடப்படும் கட்டணம் எதற்காக செலவு செய்யப்படுகின்றது என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த மதமானாலும் அடிப்படைவாதக் கருத்துக்கள் தலைதூக்குவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நூற்றுக்கு 7 வீதமான மக்களே ஹலால் சான்றிதழுடைய உணவு வகைகளை உட்கொள்கின்றனர். ஆனால், ஹால் உணவுகளை சாப்பிடக்கூடாது என தடைசெய்வது பிழையான விடயமாகும்.

அதேவேளை ஹலால் சான்றிதழுக்காக செலுத்தப்படும் கட்டணங்கள் எங்கே போய்ச்சேர்கிறது. அது மத ரீதியான அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகளுக்கு செலவு செய்யப்படுகின்றதா? என்பதை ஆராய வேண்டியது கட்டாயமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment