Translate

Saturday 8 December 2012

இலங்கை ஊடாக இந்திய இரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றவர் சிக்கலில்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் ஆசாத் நகரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (வயது35). கடந்த செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு இலங்கையில் உள்ள தூதுவர்கள் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை சி.டி., மற்றும் பென்டிரைவ் மூலம் கடத்த முயன்ற போது கியூ பிரிவு பொலிஸார் தமிம் அன்சாரியை கைது செய்தனர்.


மேலும் இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஹாஜி மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் உள்பட 4 பேர் மீது கியூ பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. முதலில் வழக்கு விசாரணைக்காக தமிம் அன்சாரி நேரில் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றுக்கு அழைத்து வரும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி திருச்சி சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிம் அன்சாரியிடம் நீதிபதி விசாரித்தார்.

இந்த நிலையில் தமிம் அன்சாரியின் அதிராம்பட்டிணத்தில் உள்ள வீடு, அலுவலகத்தில் பொலிஸார் சோதனை நடத்திய போது ஆடியோ டேப் ஒன்று சிக்கியதாக கூறப்படுகிறது. அதோடு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு, தமிழகம் வந்த போது அவருடன் தமிம் அன்சாரி தனது சொந்த காரில் சென்று வந்ததும் தெரியவந்தது. அந்த காரையும் பொலிஸார் கைப்பறினர்.

இந்த நிலையில் திருச்சி சிறையில் உள்ள தமிம் அன்சாரி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து உள்ளது. இதற்கான உத்தரவை கடந்த 5ம் திகதி தமிழக அரசு வெளியிட்டது. இந்த உத்தரவு நகல் திருச்சி சிறையில் உள்ள தமிம் அன்சாரியிடம் நேற்று வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment