Translate

Sunday 30 December 2012

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!

கடும் மழை காரணமாக வட பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளி நொச்சி ஆகிய இடங்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் தமது இல்லிடங்களை விட்டு வெளி யேறி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர் என்ற தகவல் வேதனை தருவதாகும். போரினால் பாதிக்கப்பட்டு தற்காலிக வீடு களில் தஞ்சமடைந்த மக்களை இயற்கையும் பழிதீர்ப்பது கண்டு உள்ளம் பதைக்கிறது.


இறைவா! எங்கள் மீது நீ பகை கொண்ட னையோ! எங்கள் வாழ்வில் ஏன்தான் இப்படி யான சோதனைகள் என்ற ஏக்கத்தின் மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குகின்ற தார்மீகப் பொறுப்பை நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ளோம் என்ற உண்மையையும் மறந்துவிடக் கூடாது. எனவே வட பகுதியில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும். அதேசமயம் இதுபோன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்ற வேளைகளில், எமது மக்களுக்கு உதவுவதற்கான பொது அமைப்புகளை மாவட்ட ரீதியாகவேனும் அமைப்பது கட்டாயமான தாகும்.

எங்கள் புலம்பெயர் உறவுகளின் உதவிக ளையும் உள்ளடக்கியதாக பொது அமைப்புகள் உருவாக்கப்படும் சந்தர்ப்பத்தில் இதுபோன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்ற வேளைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி களை வழங்க முடியும். கடந்த கால அனுபவங்களை நோக்கினால், அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்பு நிவாரண உதவியை திரட்டும்போது ஏற்படக்கூடிய காலதாமதங்கள், நிவாரண உதவியின் பெறுமானத்தைக் குறை த்துவிடுவதுடன் சில சந்தர்ப்பங்களில் திரட்டப் பட்ட பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்ற டையாத நிலைமைகளும் ஏற்பட்டு இருந்தன.

எனவே அனர்தங்களின்போது உடன் உதவக் கூடியதான பொது அமைப்புகள் இயங்குவது அவசியமாகும். வன்னிப் போர் நடந்தபோது யாழ்ப்பாணத்தில் இந்து அமைப்புகளின் ஒன்றியம் என்ற அமைப்பு எழுகை பெற்றது. இந்த அமைப்பு ஏகப்பட்ட உதவிகளை சேக ரித்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது என்பதற்கப்பால், அவ் அமைப்புக்கு கிடைத்த நிதியில் பெருந்தொகையை யாழ். மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்கள் கொடுத்தன என்ற செய்தி நன்றியோடு நினைவுபடுத்தப்பட வேண்டும்.

எனினும் சமகாலத்தில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் இயங்கு நிலைக்கு செயற்கைச் சுவாசம் தேவைப்படுவதாக இருந்தாலும், அந்த அமைப்பில் ஏதேனும் நிதி வசதி இருந் தால் அதனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு பிரயோசனப்படுத்த அமைப்பின் நிர்வாகி கள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்காக எங்கள் உதவிக்கரங்களை பலமாக நீட்டிக் கொள்வோம்.

நன்றி: வலம்புரி ஆசிரிய தலையங்கம் (29.12.2012)

1 comment: