Translate

Saturday 8 December 2012

யாருக்குச் சொல்லி அழ?


தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் இருக்கும் வரைக்கும் தமிழரின் பாதுகாப்புக்கு ஒரு கவசம் இருந்தது. தமிழரின் மீது கை வைத்தால்பிரபாகரன் படை பதில் சொல்லும் என்ற அச்சம் சிங்களப் பேரினவாதத்திடம் இருந்ததுஆனால் அந்தக் கவசத்தை இழந்து நாங்கள் கேட்கஒருவரற்ற இனமாய் நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றோம்.
http://www.infotamil.ch/photos/top/general/K%20%203.jpg


  • "உங்களின் பிள்ளைகள், உறவுகள் புதைக்கப்பட்ட மண்ணில்- அவர்கள் நினைவாக ஒன்று கூடி- அழுவதற்காக, அவர்களின் ஆன்மாக்களோடுஉறவாடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்போருக்காக எதிர்காலத்தில் வாக்களியுங்கள். வாக்குகளுக்காக உங்களைத் தேடிவருவோரிடம் இதையெல்லாம் நிறைவேற்றித் தருவீர்களா என்று கேள்வியை எழுப்புங்கள். அத்தகைய உறுதிமொழி தருவோருக்குவாக்களியுங்கள். இந்தக் கேள்வியை எழுப்பத் தகுந்த தருணம் இதுவே. இதைத் தவற விட்டால் எம் உறவுகளுக்காக மௌனமாகஅழுவதைவிட வேறேதையும் செய்யமுடியாது போகும்." மரணித்த வீரர்களுக்காக ஒரு நினைவுத்தூபியைக் கூட வைத்திருக்க முடியாதநிலை காணப்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்திலேயே இந்த நிலை. சிங்களப் பேரினவாதம் தமிழர் மீது எந்தளவுக்குக்கோலோச்ச முனைகிறது என்பது இதிலிருந்தே வெளிப்படையாகிறது. இறந்தோரை வணங்கும் மரபு தமிழருடையது. ஆனால் அந்த மரபைக்கூடக் கடைப்பிடிக்க முடியாத வகையில் சிங்களப் பேரினவாதம் காடைத்தனங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. சிங்கள அரசுடன் இணங்கிப்போகலாம் என்று தமிழ்மக்களுக்கு ஆலோசனை கூறிவோர்இந்த உரிமையைக் கூட விட்டுக் கொடுக்காதவர்களிடத்தில் இருந்துஎதைத் தான் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? தமிழ் மக்கள் தமது நிலத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை வைப்பதற்குக்குக் கூடஉரிமை இல்லாத போதுஅடிப்படைச் சுதந்திரத்தை எப்படிப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? இறந்தவர்களுக்கு மரியாதைசெலுத்துவதே மனிதனின் இயல்பு- மரபு.
    அது எதிரியாயினும் நண்பனாயினும் மாறுபாடு இருக்கக் கூடாது என்பதே நாகரீக மனித சமுதாயத்தின் பண்பு. ஆனால் இறந்து போனஒருவரின் நினைவுத்தூபியைக் கூட விட்டுக் வைக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியுள்ள சிங்களப் பேரினவாதம் உயிரோடு இருக்கும்தமிழர்களுக்கா உரிமைகளை வழங்கப் போகிறது?

இனி,

No comments:

Post a Comment