Translate

Friday 20 July 2012

`அன்பு' இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிறது என்றால், அதை எப்படிப் பொறுத்துக் கொள்வது?- நடன இயக்குநர் லாரன்ஸ் பேச்சு


ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம்.

மம்மி.. நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்..

வட இலங்கை வழக்கறிஞர்கள் போராட்டம்


நீதிமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு, அச்சுறுத்தலைக் கண்டித்து இலங்கையின் வடக்கில் சட்டத்தரணிகள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததனால், பல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பருத்தித்துறை மல்லாகம் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இப்பொழுது வன்னி நிலம் எப்படி உள்ளது – படத்தொகுப்பு


வன்னி சில வருடங்கள் முன்பு வரை சொர்க்கபுரியாக இருந்தது தமிழர்களுக்கு. உலக இராஜதந்திரிகள் பார்த்து பார்த்து வியந்த இடம்.விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெற்று வேரூன்றிய இடம்.
சிங்களப் பேரினவாதத்திற்கு முப்பது ஆண்டுகலாக கனவாக இருந்த இடம். பெரும் புலிகள் விடுதலை வேட்கையுடன் வீருகொண்டு வலம் வந்த இடம் இன்று ஆதாரவற்ற முற்றிலும் வரண்ட நிலமாக காட்சியழிக்கின்றது...........  READ MORE 

”தமிழீழம்” இருக்கு ஆனா இல்லை – கருணாநிதி



‘தமிழீழம்’ என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று இந்திய மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தி.மு.க நடத்தவுள்ள டெசோ மாநாட்டில் ‘தமிழீழம்’ கோரும் தீர்மானம் முன்வைக்கப்பட மாட்டாது என்று அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
1985ஆம் ஆண்டில் டெசோ என்ற தமிழீழ அதரவு இயக்கம் உருவாக்கப்பட்டது. அது பின்னர் செயலிழந்துவிட்டது. தற்போது இலங்கையில் யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ‘தமிழீழம்’ நிறைவேற வேண்டும் என்பதுதான் தன் வாழ்நாள் ஆசை என்று கூறி அண்மையில் டெசோ மாநாட்டை புதுப்பித்தார் கருணாநிதி.

அதிவிசேட � திறமை கொண்ட இலங்கையர்களுக்கு பிரிட்டன் அழைப்பு.

விஞ்ஞானம், மானுடவியல், பொறியியல் மற்றும் கலைத்துறையில் அதிவிசேட திறமைகொண்ட இலங்கையர்களை ஐக்கிய இராச்சியத்தில் வேலைசெய்ய அழைப்பதாக ஐக்கிய இராச்சிய அரசாங்கம் கூறுகின்றது. விண்ணப்பிப்பதன் மூலம் பிரித்தானியாவில் குடியேறலாம் !

தென்னங் குரும்பையால் ஓட்டை உடைக்கும் புது முறை: அறிமுகப்படுத்திய புலனாய்வுப்பிரிவினர் !

கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லியடியில் த.தே.மக்கள் முன்னணி ஒரு பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இதனை தடுக்குமுகமாக பருத்தித்துறை நீதிமன்றில் பொலிசார் வழக்கு பதிவுசெய்தனர். அதாவது நடக்கவிருக்கும் ஆர்பாட்டத்தை தடைசெய்யவேண்டும் என அவர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை இதனை அறிந்த சில சட்டத்தரணிகள் உடனடியாகச் செயல்பட்டு, பொலிசார் முன்வைத்த விவாதங்களுக்கு, தகுந்த பதிலடிகொடுத்தனர். மக்கள் போராட்டம் நடத்த உரிமை உண்டு என அவர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பருத்தித்துறை நீதிவான் சிறிநிதி நந்தசேகரன், த.தே.மக்கள் முன்னணி ஆர்பாட்டத்தை நடத்தலாம் எனத் தீர்பளித்தார். அதுமட்டுமல்லாது, இதற்கு தகுந்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

சுவிசில் தமிழ் பெண் கொலை – கணவன் கைது.


சுவிசில் தமிழ் பெண் கொலை – கணவன் கைது.


கடந்த மாத இறுதிப் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தப் பெண்ணின் உடலம் இந்த மாதம் 2ஆம் நாள் யெனிவாவில் (Geneva) உள்ள றோன் (Rhone) ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
சுவிசில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகப்படும் காவல்துறையினர் அவரது கணவரைக் கைது செய்துள்ளனர்.

கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிறுமிகள் விபச்சாரத்தில்!


கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிறுமிகள் விபச்சாரத்தில்!

கொழும்பை மையமாகக் கொண்ட கிராமப் பகுதி சிறுமிகளை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்த பாதள உலகக்குழு பிரதானி ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தப் பாதாள உலக பிரதானி தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுதது வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்புக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட மூன்று சிறுமிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 16 தொடக்கம் 21  வயதுடையவர்களாவர். ஏமாற்றி இவர்கள் அழைத்து வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கனடா எச்சரித்துள்ள நிலையில்: பெரிதும் குழம்பத் தொடங்கியுள்ள இலங்கை அரசாங்கம்….?


வடக்கு படைக்குறைப்பு திசை திருப்பப்படுகிறதா?
  • வடக்கில் படைகளைக் குறைக்க வேண்டும், நிலஅபகரிப்பை நிறுத்த வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த விவகாரம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்திருப்பது தான். வடக்கில் தேவைக்கும் அதிகமான படையினர் நிலை கொண்டுள்ளதாகவும், போர் முடிந்து விட்டதால் படையினரை அங்கிருந்து குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்படுவது அதிகமாகியுள்ளது. உள்நாட்டில் மட்டுமன்றி, அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளும் கூட இதற்கு ஆதரவாகவே குரல் கொடுக்கின்றன. இதன்காரணமாக இலங்கை அரசாங்கம் பெரிதும் குழம்பத் தொடங்கியுள்ளது.

Thursday 19 July 2012

புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை துன்புறுத்தும் இராணுவக் குற்றப்புலனாய்வுத் துறையினர். வெளியில் சொன்னால் மீண்டும் தடுப்பு முகாமாம்.


நாம் விசாரித்தமை தொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது. அதனையும் மீறிச் சொன்னால் மீண்டும் தடுப்பு முகாம் செல்ல நேரிடுமென புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னால் போராளிகளை இராணுவப்புலனாய்வுத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை ஆவணப்படமாகிறது!



மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை ஆவணப்படமாகிறது!

19 07 12
இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தீக்குளித்து ஈகியான் காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்க்கைவரலாறு 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ...........


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
 

நித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி


நித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி

15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சிகள் மார்பிங் செய்யப்பட்டவை. என்னை பிடிக்காதவர்கள் செய்த திட்டமிட்ட சதிவேலை என்று நித்யானந்தா மறுத்துள்ளார். இந்த விவகாரம் இப்போது கோர்ட் விசாரணையில் இருக்கிறது. 





விசாரணை ஒருபுறம் நடந்தாலும்,சிங்கத்தின் குகைக்குள்ளே இவ்வளவு துணிச்சலாக புகுந்து படமாக்கியது யார்? என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. அவரது பெண் சீடரான ஆர்த்திராவ்தான் இந்த துணிச்சலான காரியத்தை கச்சிதமாக செய்து முடித்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆர்த்திராவ் வேறு யாருமல்ல. நித்யானந்தாவின் நெருங்கிய சீடராக இருந்தவர். 





கடந்த 2010-ம் ஆண்டிலேயே கர்நாடக சி.பி.சி.ஐ.டி. போலீசில் நித்யானந்தாவுக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்தார். அதன்பிறகு அமெரிக்காவில் முடங்கிப் போன ஆர்த்திராவ் மீண்டும் இப்போது விசுவரூபமெடுத்துள்ளார். நித்யானந்தாவின் லீலைகள் பற்றி மனம் திறந்து பேசினார். 





அவர் கூறியதாவது:- எனது பூர்வீகம் பெங்களூரு என்றாலும் பிறந்து வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தது எல்லாம் சென்னையில்தான். 1996-ல் பி.டெக். படித்து முடித்தேன். பின்னர் அமெரிக்காவில் எம்.டெக். படித்தேன். காதலித்து பெற்றோர் விருப்பத்துடன் கிடைத்ததற்கரிய அன்பான கணவரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கை தொடங்கினேன். நல்ல வேலை, மாதம் ரூ.2 லட்சம் சம்பளம். எல்லாம் இருந்தும் ஆன்மீக தேடல் என்னிடம் அதிகமாக எழுந்தது. அதற்காக நித்யானந்தாவின் போதனைகளை நம்பி அவரது ஆசிரமத்துக்கு செல்ல தொடங்கினேன்.





 எனது கணவர் ஏழைகளுக்கு உதவி செய்வதில் முதல் ஆளாக நிற்பார். ஆனால் ஆன்மீகத்தில் நாட்டம் கிடையாது. அவரது எச்சரிக்கையையும் மீறித்தான் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று வந்தேன். ஆசிரமத்துக்குள் போய்விட்டால் நித்யானந்தா சொல்வது மட்டும்தான் சரி. அவரை பரிபூரணமாக நாம் நம்ப வேண்டும் என்பதுதான் அங்கு தரப்படும் பயிற்சி. உலகில் மிகப்பெரிய பாவம் குரு துரோகம் என்பார். அந்த மிரட்டலுக்கு பயந்துதான் எல்லோரும் ஏமாந்து போகிறார்கள்.





 நான் எனது வேலையை உதறி தள்ளிவிட்டு ஆசிரமத்தில் தங்கினேன். அவருடைய தனியறைக்கு செல்ல எல்லோருக்கும் அனுமதி கிடையாது. தனிச் செயலாளரான ராகினிக்கு உடல்நலம் இல்லாமல் இருந்தபோது என்னை சுவாமியின் சேவைக்கு என்று அனுப்பினார்கள். அங்கு சென்றதும் அவரது மூளைச்சலவை தொடங்கியது. மதுரபாவா நிலை என்று சொல்லி ராதைபோல் இருக்க வேண்டும் என்று தேனொழுக பேசி விழுங்கி விட்டார். 





அவரது பேச்சை நம்பி கடவுளாகவே அவரை நினைத்து பலமுறை என்னையே அவரிடம் கொடுத்துவிட்டேன். அவரோடு வட இந்திய சுற்றுப்பயணம் சென்றபோது புண்ணியத் தலங்களில் வைத்தும் என்னிடம் லீலை புரிந்தார். அவரோடு இணைய தயங்கிய வேளைகளில் என் கன்னத்தில் அறைந்த சம்பவங்களும் உண்டு. அவரது பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். 





அப்போதுதான் அமெரிக்காவின் சியாட்டி நகரில் உள்ள நித்தியானந்தா பீட பொறுப்பாளரான வினய் பரத்வாஜ் என்னை தொடர்பு கொண்டு நித்யானந்தா ஓரின சேர்க்கைக்கு நிர்ப்பந்தப்படுத்துவதாக கூறி வருத்தப்பட்டார். நீயும் அவரால் சீரழிக்கப்படுவதாக அறிந்தேன் என்றார். நான் அவரிடம் மறுத்துவிட்டேன். 





இதே கேள்வியை லெனின் கருப்பன் கேட்டபோதும் முதலில் மறுத்தேன். பின்னர் மறைக்க முடியாமல் அழுதுவிட்டேன். அதன்பிறகுதான் படுக்கையறை தில்லுமுல்லுகளை படம் பிடிக்கும் திட்டம் உருவானது. 





நித்யானந்தாவின் அனுமதியுடன் காற்றை சுத்தப்பத்தும் ஒரு ஏர்பியூரி பையரை அவரது அறையில் பொருத்தினேன். அந்த பியூரிபையர் ஸ்பை காமிராவுடன் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது ஆகும். காமிராவை 2 நாள் கழித்து பார்த்தபோதுதான் அதில் ரஞ்சிதாவுடனான செக்ஸ் காட்சிகள் பதிவாகி இருந்தது.





 இந்த விஷயத்தில் ரஞ்சிதா என் இலக்கு அல்ல. அந்த சம்பவத்தோடு அவர் திருந்தி விடுவார் என நினைத்தோம். ஆனால் பலரை வழக்கு போட்டு பழிவாங்கி வருகிறார். எனவே நான் பெங்களூரு போலீசில் உண்மைகளை சொன்னேன்.





 ஆசிரமத்தில் என்னை இழந்த கதைகளை சொல்லி என் கணவரிடம் அழுதேன். அவரும் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டார். ஆனால் என்னையும், என் கணவரையும் குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தியதால் இப்போது என் கணவரும் பிரிந்து சென்றுவிட்டார்.





 நித்தியானந்தா அமெரிக்க கோர்ட்டில் போட்ட வழக்கால் 6 மாதத்தில் 30 லட்ச ரூபாயை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். அவர் எதிர்பார்ப்பது போல் நான் மூலையில் முடங்கப்போவதில்லை. எனது போராட்டத்தால் பத்து பெண்கள் நித்யானந்தாவிடம் சிக்காமல் தப்பினால் போதும். அவரது பக்தர்கள் எல்லோருமே நம்பிக்கை மோசடி செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் எல்லாம் நித்யானந்தாவுக்கு எதிராக போராட வரவேண்டும். 





என்னைப் பொறுத்தவரை நித்யானந்தா இந்த சமூகத்தின் புற்றுநோய். வெளியே தெரியாமல் வளரும் வைரஸ். அவரது நடவடிக்கைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். நித்யானந்தா- ரஞ்சிதா சி.டி. உண்மையானது என்று இந்திய அதிகாரிகள் கூறிவிட்டனர். அமெரிக்காவிலும் பிரபலமான நிபுணரிடம் அந்த சி.டி.யை ஆய்வு செய்து உறுதி செய்து விட்டேன். ஒருபோதும் நித்யானந்தா தப்ப முடியாது. இவ்வாறு ஆர்த்திராவ் கூறினார்.
நன்றி -முத்து.
 

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம் தெரியுமா?

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம் தெரியுமா?
 
அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா?

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர். 


அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன். 


இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். இத்தகைய கர்ணனை தான் கொடைத் தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கும் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.

TNAக்கு கிழக்கு மாகாண மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பாளர்கள் - பிள்ளையான் :


TNAக்கு கிழக்கு மாகாண மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பாளர்கள் - பிள்ளையான் :

 யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, கிழக்கு மாகாண மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பாளர்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தப்பிவிட்டார் ஹக்கீம் வரவேற்கிறார் சம்பந்தன்


தப்பிவிட்டார் ஹக்கீம் வரவேற்கிறார் சம்பந்தன்
news
 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்ற மு.காவின் முடிவை நான் வரவேற்கிறேன். அது ஒரு நல்ல முடிவு. அரசால் ஏமாற்றப்படுவதற்கு முன்னர் ஹக்கீம் ஏமாறாமல் வெளியேறியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். 

மட்டக்களப்பில்13அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சைக்குழுக்களும் போட்டி _


  கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 34 வேட்புமனுப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். 

கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் எமக்கு சவாலில்லை: சந்திரகாந்தன் _


  கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டிருந்தால் அது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கும். தற்போது இவ்விரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதால் அது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலாக இல்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

Wednesday 18 July 2012

“பார் ஒன்றின் வாசலில் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை அசாம் போலீஸ் நேர்மையாக மேற்கொள்ளாது”

“பார் ஒன்றின் வாசலில் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை அசாம் போலீஸ் நேர்மையாக மேற்கொள்ளாது” என்று குற்றம் சாட்டி, இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்த தனியார் டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் ராஜினாமா செய்திருப்பது மீடியா வட்டாரங்களில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


அசாமில் சில நாட்களுக்கு முன் பார் வாசலில் இளம்பெண் மானபங்கம் செயப்பட்டார் இதற்க்கு முதல்வர் தருண் கோகய் சொல்கிறார் “குற்றத்தை பார்த்த உடனே முதலில் அதை தடுக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அடுத்து போலீசுக்கும் தகவல் தந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அதை வீடியோ எடுத்து டி.வி.யில் ஒளிபரப்பியது தவறு” என்று. டி.வி சேனல் மீதே குற்றம் சுமத்துகிறார். இபிரட்சனையால் நிருபர் கவுரவ் ஜோதி நியோக்” ஏற்கனவே ராஜினமா செய்துவிட்டார் இப்போது அந்த டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் அதானு புயான் ராஜினாமா செய்துள்ளார்.


'Top of all beverage cans' more contaminated than public toilets

On Sunday a family picnic with a few drinks tin.Pada Monday, two family members admitted to hospital and placed in the Intensive Care Unit space. One died on Wednesday.
 
Autopsy results concluded it hit Leptospirosis. The virus is stuck to the tin cans are drunk, without the use of glasses / cups. Test results showed that tin was infected mice that had dried urine containing Leptospira i.


Highly recommended to rinse the parts evenly on all soda cans before drinking it. Cans are usually stored in the warehouse and delivered direct to retail stores without cleaning.
A study shows that the top of all beverage cans more contaminated than public toilets (full of germs and bacteria.)
So, clean it with water before putting mouth in order to avoid all accidents total.

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதால் ஹெல உறுமயவுக்கு இனவாதவலி ஏற்பட்டுள்ளது மனோகணேசன் தெரிவிப்பு

mano_ganeshan_புத்தரையே வெட்கித் தலைகுனிய வைக்குமளவிற்கு இனவாத மதவாத அரசியல் நடத்தும் வெட்கம்கெட்ட கட்சியான ஹெல உறுமய வெட்கம் பற்றிப் பேசுவது வேடிக்கையான விடயமெனத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் மக்களுக்கு நன்மை நடக்க வேண்டுமானால்  மனோவம் தொண்டமானும் அல்ல சிங்கமும் புலியும் கூட இணையலாமெனவும் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானுடன் மனோகணேசன் கூட்டுச் சேர்ந்துள்ளதை வெட்கம் கெட்ட அரசியல் என ஹெல உறுமயக் கட்சி வர்ணித்துள்ளது.தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள மனோகணேசன்மேலும் கூறியதாவது;

முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமானால் கிழக்கில் அரசின் செல்வாக்கு உலகிற்கு தெரியவரும் சுமந்திரன் எம். பி

கிழக்கில் முதுகெலும்புள்ள ஒருவர் முதலமைச்சராக இருந்தால் கிழக்கு மாகாணசபை அதன் பதவிக் காலத்திற்கு முன் கலைக்கப்பட்டிருக்க மாட்டாது. சர்வதேசத்தில் இருந்து வரும் அழுத்தத்தை சமாளிப்பதற்கும், உலகை ஏமாற்றுவதற்குமே ஜனாதிபதியும், அரசும் கிழக்குத் தேர்தலை திட்டமிட்டு நடத்துகின்றனர். கிழக்கு மாகாணத்தில் அரசுக்கே பெருமளவு மக்களின் ஆதரவு உள்ளது என்று எடுத்துக்காட்டவே அரசு கிழக்குத் தேர்தலை அவசர அவசரமாக நடத்துகின்றது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

என்ன சொல்வது இவர்கள் அறிவை....

இரண்டு நாட்களுக்கு முன்னால்...
 
ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கேட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையில்லை என்றார் அவர்.

Pon.Sundarlingam Concert (Advert)


Play
0.00 / 1.14


Pon.Sundarlingam Concert (Advert)
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் 
Presents 
Pon.Sundarlingam - Classical Concert 
Saturday 21st July 2012 
50, Place de Torcy 
75018 Paris 
Metro: Marx Dormoy


Pon.Sundarlingam Concert (Advert)

Thamizhamutham Radio 1 day ago

Play
0.00 / 1.14

தொடர்ந்து நடந்து வரும் முஸ்லீம்கள் படுகொலை


பழைய பர்மா(மியான்மியர்) கடந்த மாதம் தொடங்கி, தொடர்ந்து நடந்து வரும் முஸ்லீம்கள் படுகொலை பற்றி, சமூக வலைத்தளங்கள் காட்டி வரும் அக்கரையைக் கூட, ஊடகங்கள் கொள்ளவில்லை. 


உலக ஊடகங்களின் போக்கிற்கு காரணம் உணரமுடிகிறது, அமெரிக்கா முஸ்லீம்களை சமூக விரேதிகளாக சித்தரிப்பதின் போக்குக்கு துணை போகின்றன. ஆனால்.. இலங்கையின் ஊடகங்கள் கூட ஏன் இதைக்குறித்து சரியான அக்கரை கொள்ளவில்லை என்பது தான் விளங்க மாட்டேங்கிரது.

கொத்து,கொத்தாக மனிதர்கள் கொள்ளப்படும் போது பேசாமல் இருப்பது என்ன மனிதத்தனமாக இருக்க முடியும்!

என்ன சமூகத்தில் வாழ்துகொண்டிருக்கிறோம் நாம்!
 

தமிழ் மகளிர் பேரவையின் உபதலைவி திருமதி பிலோமினா லோறன்ஸ் காலமானார்


தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும் செயற்பாட்டாளருமான திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்கள் திருகோணமலையில் காலமானார்.

திருகோணமலையைச் சேர்ந்த திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்கள் மிக இளம் வயதிலேயே அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

பசில், கோத்தாபய, லலித் அணி – இந்த வாரம் புதுடெல்லி பயணம்?


சிறிலங்காவின் உயர்மட்டக்குழு இந்த வாரத்தில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, சிறிலங்காஅதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழுவே புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் கொலை வழக்கின் தீர்ப்புத் திகதி நீதிமன்றத்தினால் அறிவிப்பு


ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 8 ஆம் திகதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது எதிர்த் தரப்பு சட்டத்தரணி க. ஜெயக்குமார் எதிரி சார்பிலான வழக்கின் தொகுப்புரையினை எழுத்து மூலமாக நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

போர்க்குற்றவாளி சமரசிங்கவை அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியேற்றுமாறு கிறீன் கட்சி கோரிக்கை

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிலங்கா தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்கவை அவுஸ்ரேலியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கிறீன் கட்சியின் செனட் சபை உறுப்பினர் லீ றியானொன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2009இல் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, நாட்டை விட்டு வெளியேற முயன்ற அகதிகளை தடுத்ததாக அட்மிரல் திசார சமரசிங்க பெருமையாகப் பேசியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது தலைக்கு மேலே போர்க்குற்றச்சாட்டுகள் தொங்குவதாக செனட் உறுப்பினர் றியனொன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னயின் கவனயீர்ப்பு போராட்டம்; திட்டமிட்டபடி நடைபெற்றது


தமிழ் தேசிய மக்கள் முன்னயின் கவனயீர்ப்பு போராட்டம்; திட்டமிட்டபடி நடைபெற்றது
news
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நிமலரூபனின் படுகொலை மற்றும் வடக்கில் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லியடியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனயீர்ப்புப் போராட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று 11 மணியளவில் நடைபெற்றது. 
 
இதன் போது இராணுவப் புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தை குழப்ப பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் அது வெற்றியளிக்கவில்லை திட்டமிட்டபடி  போராட்டம் நடைபெற்றது.

ஜனாதிபதியின் சொல்லுக்கு அடிபணிந்து செயலாற்றும் முதலமைச்சர் எமக்கு தேவையில்லை: சம்பந்தன் _


  கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகும் முதலமைச்சர் இறைமையின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தக் கூடிய வல்லமையுடையவராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். 

நெல்லியடி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் ; இராணுவம் மிரட்டல்


news
நெல்லியடியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என மக்களுக்கு இராணுவம் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
பருத்தித்துறை நோக்கிச் செல்லும் போக்குவரத்து பஸ்கள் அனைத்தும் வல்லை இராணுவ காவலரணில் சோதனைக்குட் படுத்தப்படுத்தப்படவதாகவும், இதன்போது நெல்லியடியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என படையினர் மக்களிடம் மிரட்டும் பாணியில் அறிவித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் புலனாய்வினர் - ஸ்ரீதரன் எம்.பி. தகவல் _


  யாழ்ப்பாணம் நெல்லியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் புலிக் கொடிகளை ஏந்திச் சென்றதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் எம்.பி. வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 14 வேட்பாளர்களில்


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 14 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் தமிழரசுக்கட்சி 5 இடங்களை பங்கு கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. அவற்றில் ரெலோவிற்கு இரு உறுப்பினர்களும் புளொட்டிற்கு ஒரு உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் இற்கு ஒரு உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு ஒருப்பினரும் பங்கிடப்பட்டுள்ளது.



வாகனத்தின் சில்லு ஒன்றை மாற்றக் கற்றுத்தரும் அற்புதமான வீடியோ!





  
 அன்றாட நம் வாழ்க்கையில் நாம் அறிந்திருக்கவேண்டிய சில வாழ்க்கைத்திறன்களை பற்றி தெரியாதவர்களுக்கு அதனைப்பற்றி விளக்கமாக கற்றுத்தருகிறது யூடியூப்.

 ஊதாரணமாக எவ்வாறு டையை கட்டுவது, எவ்வாறு டயரை மாற்றுவது?, முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது உள்ளிட்ட பல வேலைகளைப்பற்றி நமக்கு இலகுவில் புரிந்து பழகிக்கொள்ளும் வகையில் வீடியோவாக தந்துள்ளனர் சிலர். 

சுகுமார் பாடிய எம்.ஜி.ஆர் இன் புரட்சிப் பாடலுக்கு தடைவிதித்த ஸ்ரீலங்கா காவற்துறை!


 என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

 ' என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது.

நெல்சன் மண்டேலாவின் 94 வது பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாட்டம்!


 தென் ஆப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின், 94வது பிறந்த நாளையொட்டி, இன்று அந்நாட்டில், 

 இரண்டு கோடி பேர் அவரது பிறந்த நாள் பாடல் பாடி, சாதனை படைக்க உள்ளனர்.தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காக போராட்டம் நடத்தி, பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நெல்சன் மண்டேலா. இவரது போராட்டத்தின் பலனாக, தென் ஆப்ரிக்கா ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது. தென் ஆப்ரிக்க அதிபராக பதவி வகித்த மண்டேலா தற்போது, வயோதிகத்தின் காரணமாக அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டார்.