Translate

Saturday 11 August 2012

உணர்ச்சி ஊட்டும் பேச்சு உணர்ச்சி அற்ற தமிழனாக தூங்கி கிடக்கும் எம் இன மக்களை விழித்தெழ வைக்கும்?

 


நல்ல கேள்விகள்.
நல்ல விடைகள்.
எனினும். சீமான் அவர்கள் கொஞ்சம் கவனமாக விடை இறுப்பது நல்லது.
இது போன்ற சீமான் பங்கேற்கும் நேர்க்காணல்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.
"NDTV-HINDU" - வுக்கு நன்றி, வணக்கம்.

"டெசோ" ௭ன்ற நரியின் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றுகிறார் - ௭வர் கலந்து கொண்டாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: உறுமுகிறது ஜாதிக ஹெல உறுமய.

"டெசோ" ௭ன்ற நரியின் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றுகிறார் - ௭வர் கலந்து கொண்டாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: உறுமுகிறது ஜாதிக ஹெல உறுமய. 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகட்டும் அல்லது இலங்கையின் ௭ந்தவொரு பிரஜையும் ஆகட்டும் "டெசோ" மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் ௭ன ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியது.

ஈழம்! மத்திய அரசு அனுமதி: கூட்டணி உடையும் என்ற பயமா?


ஈழம்! மத்திய அரசு அனுமதி: கூட்டணி உடையும் என்ற பயமா?

ஈழம்! மத்திய அரசு அனுமதி: கூட்டணி உடையும் என்ற பயமா?

சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 12.08.2012 அன்று டெசோ மாநாடு நடக்க உள்ளது. டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. 

ஏமாற்றும் சிங்களர், ஏமாறும் தமிழர்


ஏமாற்றும் சிங்களர், ஏமாறும் தமிழர்


இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ""ஒன்றுபட்ட இலங்கைக்குள்'' தீர்வுகாண வேண்டுமென இந்திய நாட்டின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ""ஒன்றுபட்ட இலங்கை'' என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான வரலாறு.

ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு விதித்த தடையை வாபஸ் பெற வேண்டும் - திருமாவளவன்


ஈழம் என்ற சொல்லுக்கு மத்திய அரசு தடை! தமிழக தலைவர்கள் கடும் சீற்றம்!

ஈழம் என்ற சொல்லுக்கு மத்திய அரசு தடை! தமிழக தலைவர்கள் கடும் சீற்றம்!

டெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல்லுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் கொதித்துப்போயுள்ள தமிழக தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு மத்திய அரசை திட்டித் தீர்த்துள்ளனர். 
ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு விதித்த தடையை வாபஸ் பெற வேண்டும் - திருமாவளவன் 

இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவுரை!


இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவுரை!

இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவுரை!

அண்டை நாடுகளின் விவகாரங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது இந்தியா நிதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 

டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும், ஈழம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுமாம்



டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும், ஈழம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுமாம்

டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும், ஈழம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுமாம்

டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க சென்னை பெருநகர காவல்துறை மறுத்து விட்டது. இதற்கான உத்தரவை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் பொலிஸார் வழங்கினர். 
எனினும் திட்டமிட்டபடி மாநாடு நாளை நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி!


ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி!

ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி!


சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 12.08.2012 அன்று டெசோ மாநாடு நடக்க உள்ளது. டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. 

டெசோ மாநாடு குறித்து நேர்படப்பேசு

10/8/2012 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இரவு 9,00 மணிக்கு டெசோ மாநாடு குறித்து நேர்படப்பேசு என்ற தலைப்பில் நிகழ்த்திய கலந்துரையாடல் இது.



Friday 10 August 2012

பௌத்தர்களிடமும் மகா சங்கத்திடமும் மன்னிப்புக் கோரிய ஹக்கீம்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாள்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது வெளியிட்ட சர்ச்சைக்கு உரிய கருத்துத் தொடர்பாக மகா சங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையின் முழு விவரம் வருமாறு:

போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மனோ நோயாளர்கள் ஆகியுள்ளனர்

Posted Imageபோரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மனோ நோயாளர்கள் ஆகியுள்ளனர்

வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்களில் பலர் இராணுவ வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிய வருகிறது. முப்பது வயதிற்கு குறைவான மன நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களே இவ்வாறு சிக்கிச்சை பெற்று வருகின்றனர். வெளியில் உலாவ முடியாத அளவிற்கு தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜபக்ச அரசால் மறைக்கப்படுகின்றது. இவர்கள் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதால் ஏனையோருக்கு இதுகுறித்த தகவல்கள் தெரியவரவில்லை என்று கருத்துத் தெரிவித்த ஒருவர் குறிப்பிட்டார்.

தீவீரவாதிக​ளா விடுதலைப்புலிகள்! ஒரு சிறப்பு கண்ணோட்டம்​


தீவீரவாதிக​ளா விடுதலைப்புலிகள்! ஒரு சிறப்பு கண்ணோட்டம்​


தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி பல தரப்பு மக்களாலும், பலதரப்பு அரசியல் வாதிகளாலும், பல எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டாலும் அவர்களைப் பற்றி ஒரு சரியான புரிதல் இல்லாமல் தமிழ் பேசும் மக்கள் இன்றும் இருப்பது மிகவும் வேதனையான விடயமாகவே இருக்கின்றது .தமிழ் பேசும் தமிழர்கள் நாங்கள் வேறுபட்டு ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு இருப்பது உலக அரசியலுக்கும் மிதவாத கொள்கை உள்ள ஆளும் தரப்பிற்கும் சாதகமான ஒன்றாகவே இருக்கின்றது. 

இரண்டு லட்சம் பேர், இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளனர்


இரண்டு லட்சம் பேர், இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளனர்


இலங்கையில் நடந்த போரால், தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் இரண்டு லட்சம் பேர், இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளனர். தற்போது, ஒரு லட்சம் இலங்கை அகதிகள், தமிழகத்தில் உள்ளனர்.
இலங்கையில், 1983ல் இருந்து நடந்து வந்த போரால், இலங்கைத் தமிழர்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, தமிழகத்துக்கு அகதிகளாக வரத் துவங்கினர். இவர்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சீனா மீனவர்கள் என கைது செய்யபட்டவர்கள் யார்? – அம்பலமாகும் உண்மை.


சீனா மீனவர்கள் என கைது செய்யபட்டவர்கள் யார்? – அம்பலமாகும் உண்மை.


கடந்த வாரம் சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்ட 32 சீன மீனவர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன மீனவர்கள் எனக் கூறப்படுபவர்கள் 32 பேர் சிறிலங்கா கடற் படையினரால் கைது செய்யப்பட்டுனர்.
அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு சீனா கோரிக்கை விடுத்திருந்தது.

தடுமாற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை! தடுமாற்றம் கனடா உதயனுக்குத்தான்!-நக்கீரன்


தடுமாற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை! தடுமாற்றம் கனடா உதயனுக்குத்தான்!-நக்கீரன்

கனடா உதயன் “தெளிவற்ற முடிவுகளோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடுமாறுகின்றதா?” (03-8-2012)  என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டியிருக்கிறது. அதற்கான பதில் கீழே தரப்படுகிறது.
தடுமாற்றம் ததேகூ க்கு இல்லை.  தடுமாற்றம் கனடா உதயனுக்குத்தான்.  இப்போது தலையங்கத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசே காரணம்:! விஸ்வ இந்து பரிஷத் தலைவர்


இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசே காரணம்:! விஸ்வ இந்து பரிஷத் தலைவர்

ashok_singhalஇலங்கையில் தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாததற்கு இந்திய மத்திய அரசே காரணம் என்று விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.)தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார்.

கோகுலாஷ்டமியையொட்டி, திருப்பூரில் இன்று நடைபெற உள்ள ப‌ொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த அச‌ோக் சி்ங்கால் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தில்ருக்ஷனின் மரணத்திற்கு அஞ்சலியாக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

தாக்குதல்களுக்கு உள்ளாகி கோமா நிலையில் இருந்து உயிரிழந்த அரசியல் கைதியான மரியதாஸ் தில்ருக்ஷனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரதத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

முன்னாள் புலிப் போராளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் - இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் மேஜர் ஜெனரல் குமார் மெத்தா


முன்னாள் புலிப்  போராளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் - குமார் மெத்தா
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் மேஜர் ஜெனரல் அசோக் குமார் மெத்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
 
படையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள் போராளிகளை படையில் இணைத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணைநடத்தப்பட வேண்டும் - AI


இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை நடத்தப்பட வேண்டும் - AI
இலங்கை யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்றசுயாதீன விசாரணைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபைகோரிக்கை விடுத்துள்ளது.
 
இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேசமன்னிப்புச் சபையின் இந்தியாவிற்கான நிறைவேற்று அதிகாரி ஆனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.

ஈழம் என்ற சொல்லை தடை செய்ய சொல்வது இந்திய மத்திய அரசின் உச்சகட்ட துரோகம்:பண்ருட்டி வேல் முருகன்

ஈழம் என்ற சொல்லை தடை செய்ய சொல்வது இந்திய மத்திய அரசின் உச்சகட்ட துரோகம்:பண்ருட்டி வேல் முருகன் 

திமுக ஏற்பாட்டில் நடத்தப்படும் "தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின்" (டெசோ) மாநாட்டில் "ஈழம்" என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து டெசோ அமைப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. இது திமுகவுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான விவகாரம் மட்டுமே அல்ல. ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் உச்சகட்ட வன்மத்தின் துரோகத்தின் அடக்குமுறையின் வெளிப்பாடுதான் - என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கை மீது இந்தியா மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடாது: இந்தியாவை இன்றுவரை மறக்காத ஜனாதிபதி மஹிந்த!

இலங்கை மீது இந்தியா மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடாது: இந்தியாவை இன்றுவரை மறக்காத ஜனாதிபதி மஹிந்த! 

அண்டை நாடுகளுடனடான உறவுகள் குறித்து இந்தியா மீளாய்வு செய்யவேண்டுமென சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பிலும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் - ஈழம் என்ற சொல்லும் வரும் - கருணாநிதி அதிரடி அறிவிப்பு!

டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் - ஈழம் என்ற சொல்லும் வரும் - கருணாநிதி அதிரடி அறிவிப்பு! 

டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க சென்னை பெருநகர காவல்துறை மறுத்து விட்டது. இதற்கான உத்தரவை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் பொலிஸார் வழங்கினர். எனினும் திட்டமிட்டபடி மாநாடு நாளை (12) நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் டெசோ மாநாடு நடத்த தமிழக அரசு திடீரென அனுமதி மறுப்பு


சென்னையில் டெசோ மாநாடு நடத்த தமிழக அரசு திடீரென அனுமதி மறுப்புஇலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது. 

இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. 

டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தபோது தமிழக அரசு இந்த பதிலை அளித்தது. 

யோசனை வெள்ளம் போல் வழிந்தோடிக் கொண்டு தான் இருக்கிறது ...


சந்தேகமேயில்லை, அம்மாவுக்கு .. ஆரம்பத்தில் நமபவில்லை... நம்பவே முடியவில்லை. இப்போது உறுதியான தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு வரப் போகிறது. வரத்தான் போகிறது. முந்தாநாள் முதல் அரசு தனது காலி மதுபாட்டில் கொள்முதல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் 6,802 மதுக்கடைகள் உள்ளன. இவற்றிற்கு தமிழகத்தில் உள்ள 10
மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பாட்டில்களை மறுசுழற்சி முறையில் பழைய பாட்டில்களை கழுவி சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தி கொள்கிறார்கள். இதற்காக ஏஜென்ட்களை நியமித்து தங்கள் நிறுவன பாட்டில்களை கழுவி சுத்தம் செய்து பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் எமது கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்படுமா?


தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் எமது கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்படுமா?
“நான் முன்னெடுத்திருக்கிற இவ்வுண்ணாநிலைப் போராட்டத்தில் சர்வதேசத்தை நோக்கி ஈழத்தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அவை தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்படுமா?” என இன்று பத்தொன்பதாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்திவரும் திரு. சிவந்தன் கோபி கேள்வி எழுப்பினார்.

சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா?


சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா?


 ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை நன்கு சந்தோஷமாக அமைய வேண்டும் என்று ஆசை இருக்கும். அவ்வாறு ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கு ஒரு சிலவற்றை பொறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அனைவருமே திருமணத்திற்கு முன்பு சுதந்திரப் பறவையாக, எந்த ஒரு தடையும் இல்லாமல் எதையும் விருப்பப்படி செய்திருப்போம்.

 ஆனால் அதுவே திருமணம் என்று வந்துவிட்டால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்க விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தனக்கு வரவேண்டிய வாழ்க்கை துணை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, தனக்கு வருபவருக்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ளவும் வேண்டும். ஆகவே சந்தோஷமான வாழ்க்கை அமைய ஒருசிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர்

TESO meet not against Sri Lanka- Karunanithy


DMK president M. Karunanidhi on Wednesday asked Tamils across the world not to fall a prey to the campaign of the Sri Lankan government that the Tamil Eelam Supporters Organisation (TESO) conference was against that country and that the participation of the Sri Lankans in the conference would be monitored, an Indian media reports.
Recalling Sri Lankan Minister Keheliya Rambukwella’s remarks that his government would watch the Sri Lankans who were going to take part in the conference, Mr. Karunanidhi said there was no basis for the allegation that the conference was against Sri Lanka.

டெஸோ - விமர்சனத்துக்கு அப்பால் !!!!!!!


[இந்த கட்டுரை தொடங்கும் முன் ஒன்று தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். நான் கலைஞரின் இலக்கிய மேடைப்பேச்சு ரசிகனே தவிர, தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. தி.மு.கவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.]  ஆக்ஸ்ட் 12 டெஸோ மாநாடு அறிவித்ததும், கலைஞர் ஈழ மக்களுக்காக இப்பொது ஏன் கண்ணீர் வடிக்கிறார் ? போர் சமயத்தில் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று ஈழ ம்க்களை காப்பாற்றி இருக்க வேண்டாமா ? இது வெறும் முதலை கண்ணீர் என்று பல விமர்சனங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. இனிமேலும் வரும். 

முதலில் ஒன்று தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். ஈழப் பிரச்சனையால் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும், யாருக்கும் ஓட்டு வங்கி பெருகவில்லை. பெருக போவதில்லை. இலங்கைப் போர் உச்சத்தில் இருக்கும் போது, 2009ல் நடந்த பாராளமன்ற தேர்தலில் தி.மு.க போட்டியிட்ட 18 இடங்களில் 16 இடங்கள் வெற்றிப் பெற்றது. [ காங்கிரஸ் 18ல் 9 இடங்கள் வெற்றி பெற்றதே என்று கேட்கலாம். இந்த வெற்றியே அவர்களுக்கு அதிகம். இந்த கதை இங்கு வேண்டாம்.] 

டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையினைப் பயன்படுத்த டில்லி தடை


deso
திமுக ஆதரவுடன் டெசோ அமைப்பின் சார்பாக சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
.
தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு என்ற டெசோ 1985-ல் தீவிரமாக இயங்கியது. ஆனால் அதன் பினன்ர் அந்த அமைப்பு செயல்படவில்லை. இந்த நிலையில் ஈழத்தில் பெரும்துயர்மிகுந்த போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென டெசோ அமைப்பை புதுப்பிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். மேலும் தமிழீழத்தை அடைவதற்காக டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். 

அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு இங்கு என்ன வேலை: பிரபா கணேசன்


அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு இங்கு என்ன வேலை: பிரபா கணேசன்

pirabha
இலங்கையில் போர் முடிவுற்றதை பற்றியும் எதிர்கால இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் பேசும் சுப்பிரமணிய சுவாமி யுத்தத்திற்கு பின்னரான இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக எதுவும் பேசுவதில்லை. 


இன்று நேற்று அல்ல என்றுமே இவர் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். 

மிரண்டார் ஹகீம், மன்னிப்பு கோரினார் பிக்குகளிடம்


Bhikku
கிழக்குமாகாண தேர்தல் களத்தில் வாக்குகளை கவர அரசாங்கத்தினையும், பிக்குகளையும் சாடி பேசினார் ஹகீம். அதாவது காவியுடை தரித்த பயங்கரவாதம் என பேசினார். இதனால் மஹிந்தா அமைச்சரவை மற்றும் பிக்குகள் சங்கம் போர்க்கொடி தூக்கினர். ஹகீம் அரசில் அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசக்கூடாது எனவும் எனவே அவரது அமைச்சுப்பதவியினை பறிக்கவேண்டும் எனவும் கோஷமிட்டனர்.

இலங்கை இராணுவத்திற்கு பெங்களூரில் இராணுவப் பயிற்சி! தமிழ் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்... இந்திய அரசுக்கு இந்து அமைப்புகள் கண்டனம்... .

இலங்கை இராணுவத்துக்கு எந்தப் பயிற்சியும் அளிக்காமல் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கருநாடகத் தமிழர் பேரவை நேற்று பெங்களூர் டவுன்ஹால் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தது.      இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்றுப் பேசியப் பேரவையின் தலைவர் இராவணன் “இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்து, தற்போது அங்குள்ள தமிழ் மக்களை விலங்குகளை விடக் கேவலமாக நடத்தும் இலங்கைப் படையினருக்கு, பெங்களூரில் பயிற்சி அளிப்பது தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது. உலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.மன்றத்தில் வாக்களித்துவிட்டு, பிறகு யாருக்கும் தெரியாமல் அந்த நாட்டு இராணுவப் படையினருக்கு இந்தியாவில் பயற்சி கொடுப்பது தமிழர்களுக்குச் செய்யும் இரண்டகமாகும். மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பது இதன்மூலம் புலனாகிறது.      சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் கூட்டாளி நாடான இலங்கைக்கு ஆயுதப் பயிற்சியோ, போர்ப் பயற்சியோ அல்லது பண உதவியோ செய்வது இந்தியாவிற்கு ஆபத்தானது. மத்திய அரசு இதனை உணரவேண்டும்.      ஆகையால், இலங்கை இராணுவத்துக்கு எந்தப் பயிற்சியும் அளிக்காமல், இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால், தீவிரமான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.      இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், புரட்சிகரத் தமிழ் இளைஞர் இயக்கம், நாம் தமிழர் கட்சி, கர்நாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கர்நாடகா கன்னடர் தமிழர் பெடரேஷன் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்தனர்.
**********

     அதேபோல் முந்தாநேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்ரீ ராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் “அகன்ற பாரதத்திலிருந்து இலங்கையை வேறுபடுத்தி, ஸ்ரீலங்கா அல்லது சிலோன் என்று அழைத்தது அன்றைய ஆங்கிலேய அரசு.
     அங்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மூலக் குடிகளான இந்து மக்களை, இரண்டாந்தரக் குடிகளாக்கியது சிங்கள பேரினவாத அரசு. அங்குள்ள இந்து மக்களுக்கு அரசு அலுவலகங்களில், இராணுவத்தில், புலனாய்வுத்துறையில், காவல்துறை போன்ற துறைகளிலெல்லாம் வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது. 

ராஜபக்சவின் தப்புக்கணக்கு! தினமணி தலையங்கம்.

ராஜபக்சவுக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், வடக்கு மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். நடத்தாமல் போனால்? ஒருவேளை, சரித்திரம் திரும்பக்கூடும்! என்கிறது தமிழ்நாட்டின் ‘தினமணி’ நாளேட்டில் இன்று வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்.
     “அதிபர் ராஜபக்சவைப் பொருத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன

கருநாடகத்தில் சாதி சான்றிதழ் இல்லாமல் தவிக்கும் 20 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள்!

     இலங்கையில் இருந்து கருநாடகத்தில் குடியேற்றம் பெற்றுள்ள தமிழர்களுக்கு, சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
     இந்தியாவும், இலங்கையும் ஆங்கிலேயர்களின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், அதாவது, 200௦௦ ஆண்டுகளுக்கு முன்பு தோட்டத் தொழிலில் ஈடுபடுவதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்களை ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

டெசோவில் கலந்து கொள்வோர் தமிழினத் துரோகிகள் - சீமான்!


டெசோவில் கலந்து கொள்வோர் தமிழினத் துரோகிகள் - சீமான்!

டெசோவில் கலந்து கொள்வோர் தமிழினத் துரோகிகள் - சீமான்!

சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலைப் பெற்று தமிழீழ தனி அரசை ஏற்படுத்துவது ஒன்றே இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்விற்கு ஒரே வழி எ‌ன்று கூ‌றியு‌ள்ள நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி தலைவ‌ர் ‌‌சீமா‌ன்,தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வராது டெசோ மாநா‌ட்டை தமிழினத்தவர் அனைவரும் புற‌க்க‌ணி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர். 

டேட்டிங் போறீங்களா? இதை கவனமா படியுங்க...


டேட்டிங் போறீங்களா? இதை கவனமா படியுங்க...

டேட்டிங் போறீங்களா? இதை கவனமா படியுங்க...


இன்றைய காலத்தில் காதல் செய்தால்
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கு டேட்டிங் செல்கின்றனர். மேலும் காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். அது உண்மையிலேயே சரி தான். அத்தகைய காதல் எங்குஎப்போது வரும் என்று சொல்ல முடியாது. 

Thursday 9 August 2012

தவறுதல் நடந்துவிட்டது! கடவுச்சீட்டை வழங்குமாறு இந்திய வீசா அலுவலர் அறிவித்தார்! விக்ரமபாகு

தவறுதல் நடந்துவிட்டது! கடவுச்சீட்டை வழங்குமாறு இந்திய வீசா அலுவலர் அறிவித்தார்! விக்ரமபாகு
 
தவறுதலாக வீசா மறுக்கப்பட்டுள்ளதாகவும், கடவுச்சீட்டை வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகராலய கொன்சியூல் அதிகாரி தனக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

லண்டனில் பிரிட்டன் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழ தேசியக் கொடி: இலங்கை கடும் கடுப்பில் ஒப்பாரி


லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் 18வது நாள்! 12ம் திகதி வரை தொடரும் என அறிவிப்பு

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் 18வது நாள்! 12ம் திகதி வரை தொடரும் என அறிவிப்பு
 

நீர் மட்டுமே அருந்தியவாறு பதினெட்டு நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி அவர்களது உடல் மிகவும் பலவீனமான நிலையை அடைந்துள்ள போதிலும், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தனது போராட்டத்தை தொடர்வதில் அவர் உறுதியாகவுள்ளார்.

அபிவிருத்தி செய்வதனால் மட்டும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது!- பிரான்ஸ் தூதுவர்


அபிவிருத்தி செய்வதனால் மட்டும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது!- பிரான்ஸ் தூதுவர்
 
பொருளாதார அபிவிருத்தியின் மூலம் மட்டும் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டின் ரொபிசொன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் வெளிநாட்டு நண்பர்களுக்கு உதவிகளை வழங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாணமை விநாயகர் ஆலய சிலை அகற்றியமைக்கு கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் கண்டனம்


பாணமை விநாயகர் ஆலய சிலை அகற்றியமைக்கு கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் கண்டனம்

 பாணமை சித்திவிநாயகர் ஆலயத்தில் பௌத்தர்களினால் அகற்றப்பட்ட விநாயகர் சிலையை மீண்டும் ஆலயத்தில் நிறுவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடவடிக்கையெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம் ஆலயத்துக்குள் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனம்



அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ௭ன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சிறீலங்காவில் தமிழர் சிறையிலும் கொல்லப்படும் அவலம்


சிறீலங்காவில் தமிழர் சிறையிலும் கொல்லப்படும் அவலம்

வவுனியா சிறைச்சாலையில் சிறை காவலர்களாலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான பாசையூரைச் சேர்ந்த மரியதாஸ் டெல்றொக்சன் (வயது-37) நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புலம்பெயர் மக்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராக செயற்படுகின்றனர் – ஜீ.எல்.பீரிஸ்

தமிழ் புலம்பெயர் மக்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராகசெயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் புலம்பெயர்தமிழர்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராக செயற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்கின்றது மனிதநேயனின் இலட்சிய பயணம்


சிறப்புக் காணொளி

  

தொடர்கின்றது மனிதநேயனின் இலட்சிய பயணம்

ஐந்து அம்சக்கொரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 22ஆம் நாள் மனிதநேயன் திரு கோபி சிவந்தன் அவர்களால் தொடங்கபட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் பதினாலாம்  நாளாக தளராத மனதோடு தொடர்கின்றது.

அம்பாறையில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடம் இருந்து அபகரிப்பு .


1967ம் ஆண்டுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தமிழர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் இருந்து வெளியாகும் 'ருத் டைவ்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை காவியுடை பயங்கரவாதம் குறித்த கருத்து அம்பலப்படுத்துகிறது: ஹெல உறுமய

முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை காவியுடை பயங்கரவாதம் குறித்த கருத்து அம்பலப்படுத்துகிறது: ஹெல உறுமய

காவியுடை பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தோற்கடிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதை ஜாதிக ஹெல உறுமய விமர்சித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.


உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் திருவிளையாடல்கள் -   அனலை நிதிஸ் ச. குமாரன்


தலைமையுடன் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் சட்டத்தை நீடித்தது உலகின் முதலாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா. ஒரு காலத்தில் அமெரிக்காவை எதிர்த்த இந்தியா தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவும் சர்வதேச தீவிரவாதிகளுக்கெதிரான சர்வதேச போரின் முன்னணி நாடாகவும் திகழ்கின்றது. உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்று கூறும் அமெரிக்காவோ இந்தியா ஒரு மாதத்துக்கு முன்னர் செய்த காரியத்தையே செய்து அறிக்கையையும் விட்டுள்ளது.

டில்ருக்சனின் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் ; உடல் நாளைய தினம் பெற்றோரிடம் கையளிப்பு

டில்ருக்சனின் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் ; உடல் நாளைய தினம் பெற்றோரிடம் கையளிப்பு
news
வுனியா சிறையில் நடைபெற்ற அசம்பாவிதத்தில் தாக்கப்பட்டு கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மரியதாஸ் டில்ருக்சனின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் மாநாட்டுக்கு கருணாரத்ன போகமுடியாத நிலை

கருணாநிதியின் மாநாட்டுக்கு கருணாரத்ன போகமுடியாத நிலை
news
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியால்  நடாத்தப்படும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இந்தியாவில் நுழைவதற்கான விசாவினை வழங்க இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது 

Wednesday 8 August 2012

கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது; அமைச்சர் வாசுதேவ

கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது; அமைச்சர் வாசுதேவ
news
சிறையிலிருந்த கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுள்ளது என அரசின் பங்காளி கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

போராளிகள் காணாமற்போனதை உறுதிப்படுத்திய புள்ளி விவரங்கள் பாதுகாப்பு மாநாட்டில் குட்டு அம்பலம்

போராளிகள் காணாமற்போனதை உறுதிப்படுத்திய புள்ளி விவரங்கள்
பாதுகாப்பு மாநாட்டில் குட்டு அம்பலம்
news

2009ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக நிலவும் குழப்பத்தை, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று நிகழ்த்தியுள்ள உரை உறுதி செய்துள்ளது.

கோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று அதிகாலை உயிரிழந்தார் மகனைப் பார்வையிடச் சென்ற பெற்றோர் பெரும் துயரில்

கோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று அதிகாலை உயிரிழந்தார்
மகனைப் பார்வையிடச் சென்ற பெற்றோர் பெரும் துயரில்
news
 
வவுனியா சிறையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து கைதிகள் மீது பொலிஸாரும் சிறைக்காவலர்களும் மேற்கொண்ட மோசமான மிலேச்சத்தனமான  தாக்குதலால் காயங்களுக்கு இலக்காகி கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்று அதிகாலை சிகிச்சை பயனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

இராணுவ செயலமர்வில் முன்னாள் போராளிகளின் விசேட நடன நிகழ்வு இன்று


கொழும்பில் நடைபெறுகின்ற இராணுவ செயலமர்வில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விசேட நடன நிகழ்வு இன்று காண்பிக்கப்படவுள்ளது.

இதில் கோகுலன் ௭ன்ற புனர்வாழ்வு பெற்ற போராளி பாடலொன்றை பாடவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

டெசோ மாநாடு, மாகாணசபை தேர்தல்கள் தொடர்புகளில் ஆராய இன்று மாலை ஜமமு அவசர அரசியல்குழு கூட்டம்


திராவிட முன்னேற்ற கழகத்தினால் சென்னையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டெசோ மாநாட்டில் கலந்து கொள்வது, சப்ரகமுவ மாகாணசபை தேர்தல் பிரசார நடவடிக்கைகள், கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு, நெருக்கடிமிக்க அரசியல் கைதிகளின் விவகாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவுகளை எடுப்பதற்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு கட்சி தலைமையகத்தில் கூடவுள்ளது.

பாணமை பிள்ளையார் சிலை மீண்டும் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்


"80 வருட பழைமையான கிழக்கு மாகாண பாணமை பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் சிலையை பலவந்தமாக கடத்தி சென்றுள்ள, காவி உடை கோஷ்டி, அரசாங்கத்தின் மதவாத-இனவாத கொள்கை தரும் தைரியத்தில்தான் செயல்படுகிறது. இது இப்படியே போனால், நாளை நல்லை கந்தனையும் இவர்கள் கடத்தி செல்வார்கள். கடந்த காலங்களில் இப்படித்தான், கதிர்காம கந்தனையும் இவர்கள் கடத்தி சென்று இன்று அதை ஒரு பௌத்த ஸ்தலமாக மாற்றி விட்டார்கள். கடத்தி செல்லப்பட்ட பாணமை பிள்ளையார் சிலை மீண்டும் பாணமை ஆலய அறங்காவலர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும்" என மனோ கணேசன் கூறியுள்ளார். 

சிறுபான்மை மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன –பிரேம்குமார் குணரட்னம்


சிறுபான்மை மக்ளக் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியப் பிரஜையான பிரேம்குமார் அந்நாட்டு ஊடகமொன்றுக்குஅளித்த செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகள்பிரயோகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள அரசின் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் : மு. கருணாநிதி



டெசோ மாநாடு குறித்து இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டு வரும் தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சிறீலங்காவில் தமிழர் சிறையிலும் கொல்லப்படும் அவலம்



வவுனியா சிறைச்சாலையில் சிறை காவலர்களாலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான பாசையூரைச் சேர்ந்த மரியதாஸ் டெல்றொக்சன் (வயது-37) நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடதமிழீழத்தில் சிங்களக் கைக்கூலிகள் மூவர் கொலை! அதிர்ச்சியில் சிங்கள இராணுவம்!


வடதமிழீழத்தில் சிங்களக் கைக்கூலிகள் மூவர் கொலை! அதிர்ச்சியில் சிங்கள இராணுவம்!
யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் சிங்களப் படைகளுடன் இணைந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.08.2012) இரவு இடம்பெற்ற இச்சம்பவங்களில் பலியான மூவரும் கிளிநொச்சி வட்டக்கச்சி, முல்லைத்தீவு விசுவமடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வை சர்வதேசத்தினால் வழங்க முடியாது


இலங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வை சர்வதேச நாடுகளினால் வழங்கமுடியாது, அதற்கான சந்தர்ப்பங்களும் கிடையாது. எனவே, தேசிய பிரச்சினைக்கான
தீர்வை அரசாங்கமே தீர்மானிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பன்னாட்டு இராஜதந்திரிகளுக்கும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

மகிந்த ராஜபக்ஷ ஒரு போர்க்குற்றவாளி என சொல்லுமா டெசோ?


இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி என டெசோ மாநாடு சொல்லுமா என சீமான் கேட்டுள்ளார்.
நாம் தமிழர் இயக்க தலைவர் செந்தமிழ் செல்வன் சீமான் அவர்கள் NDTV Hindu தொலைக்காட்சி நடாத்தும் ''கேள்விக்கு என்ன பதில்'' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது மட்டுமனறி இன்னும் பல கருத்துக்களோடு கேள்விகளையும் கேட்டுள்ளார்...

Monday 6 August 2012

ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 5வது நாள் ஆரம்பம்


ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 5வது நாள் ஆரம்பம்

ஐந்தாவது நாளாக லுட்சர்ன் மாநிலத்தில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து தொடங்கப்பட்டது. ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆலயத்தில் சிறப்புப் பூசையொன்றைச் செய்து ஐந்தாவது நாள் பயணம் தொடங்கியது.

அம்பாறையில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடம் இருந்து அபகரிப்பு .

அம்பாறையில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடம் இருந்து அபகரிப்பு .
 
1967ம் ஆண்டுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தமிழர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் இருந்து வெளியாகும் 'ருத் டைவ்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.